இன்றைய ராசிபலன் – 11 செப்டம்பர் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த தடையை எல்லாம் சரி செய்து, தொழிலை லாபகரமாக நடத்திச் செல்லக் கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாதீர்கள். சின்ன சின்ன வியாபாரிகளும் இன்று கொஞ்சம் முயற்சி செய்தால் நிறை இலாபம் எடுக்கலாம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். காலரைத் தூக்கி விட்டு எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல நிறைய உழைப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. நான் உழைத்து, என் பணத்தில் இதை வாங்கினேன் என்று நெஞ்சை தட்டிக் கொள்ளும் நேரம் இது. உங்களுக்கான அதிர்ஷ்ட காற்று நிச்சயம் வீசும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயத்தில் ஏற்படக்கூடிய மறதி கூட பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கி விடும். ஜாக்கிரதை, குறிப்பாக மாணவர்கள் உங்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டுங்கள். முக்கியமான மீட்டிங் ஏதாவது உங்களுக்கு இருந்தால் அந்த வேலையை கூடுதல் கவனத்தோடு செய்யவும். கணக்கு வழக்கு பார்ப்பவர்கள் உங்களுடைய வேலையில் அதிக அக்கறை காட்டவும். கவனக்குறைவாக எந்த பிழையும் ஏற்படக்கூடாது. கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வந்தால் அங்கேயும் சக ஊழியர்கள் சப்போட்டாக நிற்பார்கள். தொழிலில் பிரச்சனை வந்தால் அந்த இடத்தில் பார்ட்னர் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. வீட்டில் மனைவி பார்ட்னர் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. இப்படி நிறைய நல்லவர்களின் நல்ல மனது உங்களுக்கு புரியக்கூடிய நாள் இன்று. - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வீட்டில் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். கடன் தொல்லை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சாந்தமான நாளாக இருக்கும். உங்களுக்கு கோபமே வராது. ஆனால் கோபப்படுத்தக் கூடிய நிறைய விஷயங்கள் உங்களை சுற்றி நடக்கும். வேலையில் டென்ஷன் இருக்கும். தொழிலில் டென்ஷன் இருக்கும். இருந்தாலும் எல்லா விஷயங்களையும் பேலன்ஸ் செய்து இன்றைய நாளை அழகாக நகர்த்தி செல்வீர்கள். அதுவே உங்களுக்கு பெரிய சக்சஸ்தான். துன்பம் வரும்போது சிரிப்பவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து நடந்து கொள்வீர்கள். - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன கஷ்ட நஷ்டங்கள் வந்து போகும். வேலையில் கொஞ்சம் நிம்மதி கெட்டுப் போகும். தொழிலில் யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத காரணத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டில் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் சில பிரச்சனைகள் வரும். வீண்வினையை செலவுகள் வரும். இந்த பிரச்சனைகளை எல்லாம் இன்று சமாளித்து தான் ஆக வேண்டும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கக்கூடிய நாள். இறைவழிபாடு செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த வேலையை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை சுபசெலவை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். இந்த நாள் முழுவதும் டென்ஷனோடு தான் உங்களுடைய வேலை நடக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருக்கும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களோடு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி அதிர்ஷ்டம் வரும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சொத்து சுகம் சேர்க்கை சில பேருக்கு இருக்கலாம். நிதி நிலைமை சீராகும். மனைவிக்கு பிடித்த ஆபரண பொருட்களை வாங்கி பரிசளிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி உங்களுக்கான ஆடம்பர தேவைகளை இன்று நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்போது சாதாரணமாக நடுத்தரமாக வாழ்பவர்களுக்கு என்ன பலன். உங்களுக்கு தகுந்தபடி நிச்சயம் உங்களுக்கான நல்லதும் நடக்கும். கும்பம் கும்ப ராசிக்காரர்கள் இன்று சாதிக்க பிறந்தவர்களாக நடந்து கொள்வீர்கள். எந்த கஷ்டமான பெரிய வேலையாக இருந்தாலும் சரி, அதை சுலபமாக முடித்து விடுவீர்கள். இது என்னால் முடியும், என்று நம்பிக்கையோடு பேசுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் அதிகமாகும். வெற்றி வாகை சூடுவீர்கள். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி இருக்கும். சண்டை போட்டு கொண்டிருந்த மனைவியை சரி கட்டி விடுவீர்கள். அதிலேயே பாதி டென்ஷன் குறைந்து விடும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனை குறையும். மன நிம்மதி கிடைக்கும். இன்று மாலை கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஹெட் போன் போட்டு கொண்டு வண்டி ஓட்ட வேண்டாம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-11-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024