இடுகைகள்

கோவில் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாறு

படம்
Tirupati Temple History in Tamil ? “வாழ்வில் திருப்பம் நிச்சயம்” என்று   திருப்பதி  தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்! ?   திருப்பதி  ஏழுமலையான் கோவில் / வெங்கடேஸ்வரா கோவில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் முழுக்க முழுக்க பாரம்பரிய கோவிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   Tirupati Balaji  Idol ? 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே  8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின் மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன. ? கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்ப

தஞ்சை பெரிய கோவில் ‎வரலாறு

படம்
Thanjai Periya Kovil History in Tamil   தஞ்சாவூர்    பெரிய கோவில்  வரலாறு ? தமிழர்களின் சமயம் சைவ சமயம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. வங்காள விரிகுடாவை தங்களின் ஒரு சிறு ஏரியாக கருதி கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம் மற்றும் வாழ்க்கை முறையை பரப்பியவர்கள்  சோழர்கள் . அந்த பரம்பரையின் பெருமையை எக்காலத்திற்கும் கூறும் வகையில்  ராஜ ராஜ சோழனால்  கட்டப்பட்ட    தஞ்சாவூர்  ஸ்ரீ பிரகதீஸ்வரர்  ஆலயம் பற்றிய சில தகவல்களை இங்கு பார்க்கலாம். ? 1000  ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது   தஞ்சை பெரிய கோவில்   பெரிய கோவில் . எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜனின்  1032 -ம் ஆண்டு சதயவிழா  29.10.2017  கொண்டாடப்பட்டது..   ? சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய  ராஜ ராஜ சோழன்   சிவபெருமான்  மீ

வல்லக்கோட்டை முருகன் கோவில்

படம்
Vallakottai Murugan Temple History in Tamil திருத்தலம் வல்லக்கோட்டை முருகன் கோவில் மூலவர் சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்) தல விருட்சம் பாதிரி மரம் தீர்த்தம் வஜ்ஜிர தீர்த்தம் ஊர் வல்லக்கோட்டை மாவட்டம் காஞ்சிபுரம் ? பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம். ? புறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது.   திருச்செந்தூர்  முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு   அல்வாய்   என்ற பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் ப

ஸ்ரீ மேருபுரம் மஹாபத்ரகாளி அம்மன் கோவில், லண்டன்

படம்
London Kali History in Tamil ஸ்ரீ மேருபுரம் மஹாபத்ரகாளி அம்மன்,   லண்டன் ? இவ்வுலகைக் கருணையோடு படைத்தும், காத்தும் அருளுகின்ற கருணைத் தாயான அகிலாண்டதேவி பிரமாண்ட நாயகி ஆதிபராசக்தி வடிவுக்கரசியாய் அருள்தரும் தாயார் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளின் திருவருட்சக்தி சொல்லிலடங்காது. சக்தியெனப் போற்றப்படும் தாய் எம்மை நாள்தோறும் காத்து அருள்கின்றாள். Benefits of Worshiping God ? நாம் இறைவனை நம்பிக்கையுடன் போற்றி வழிபட வேண்டும். இறைவன் எம்மைப் பெரியவனாக்க ஆணவம் எம்மைச் சிறியவனாக்குகிறது. எனவே ஆணவப் பிடியிலிருந்து விடுபட்டு அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதற்கு இறைவழிபாடு செய்வதே சிறந்த வழியாகும். வாழ்க்கை பயனற்றதாகப் போகாமல் காப்பற்றப்படுவதற்கு இறைவழிபாடே சிறந்த மருந்தாகும். இறைவன் அன்பு வடிவானவன். ? எனவே நாம் இறைவன் மீது அன்பும் உறுதியும் கொண்டு அபிஷேகம் பூஜை அர்ச்சனைகள் பிரார்த்தனைகள் கூட்டு வழிபாடுகள் (பஜனை) ஆலயத் தொண்டுகள் போன்றவற்றை பக்தி பூர்வமாக நம்பிக்கையுடன் இறைவழிபாடாற்றினால் இறையருள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இறைவன்பால் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க நமக்கு