இடுகைகள்

விழாக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தைப்பூசம் விரதம் இருக்கும் முறை & பலன்கள்: Thaipusam

படம்
[ad_1] Thaipusam in Tamil தைப்பூசம் தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. “தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்” முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். Thaipusam Festival in Tamil தைப்பூசத் திருவிழா: வெவ்வேறு இடத்திலுள்ள மக்களால் வெவ்வேறு விதமாக தைப்பூசம் திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைப்பூச நாளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்: அன்னை பராசக்தி மற்றும் சிவபெருமானின் மகனான முருகனின் பிறந்தநாளே தைபூசத் திருநாளாக நம்பப்படுகிறது. ஆதியும் அந்தமுமான சிவபெருமான், பராசக்தியுடன் சேர்ந்து சிதம்பரத்தில் நடனமாடி தரிசனம் செய்த நாளும் தைப்பூச நாளாகும். சிதம்பரத்திலுள்ள திருக்கோவிலில் திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்த இரணியவர்மன், சிதம்பர நடராஜரை நேரில் சந்தித்து அருள்பெற்ற நாளும் இந்நாளே. மேலும் தைப்பூசத்தன்றுதான் சுவாமி வள்ளலார் அவர்கள் ஒளியாகினர். அவர் ஒளியான வடலூரில் உள்ள மேட்டுக்கு...

Mulaipari Festival, Songs - Mulaipari Preparation in Tamil

படம்
[ad_1] Mulaipari Festival in Tamil முளைப்பாரி வழிபாடு 🛕 கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்த கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்த கிராம தேவதைகளின் வழிபாட்டால் தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு. Mulaipari Preparation in Tamil 🛕 கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் (கொடியேறும்) நாளன்று திருமணமான (குழந்தை பிறக்க தகுதி இருக்கும்) சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் (வீட்டிலுள்ள இருட்டு அறையில்) வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும் இந்த முளைப்பாரி வள...

சரஸ்வதி பூஜை - Saraswathi Pooja Procedure in Tamil

படம்
[ad_1] சரஸ்வதி பூஜை (Saraswathi Pooja) ஆயுத பூஜை (Ayudha Pooja in Tamil) 🛕 நவராத்திரியின் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை இரவு நேரத்தில் பூஜித்து வழிபடுவதே சிறந்தது. இந்த 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபடுவது இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று நிறைவேறும் என்பது ஐதீகம். 🛕 புராணங்கள் அடிப்படையில் மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மூன்று தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஒரே தேவியாக உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர். இதனையே நவராத்திரி நமக்கு உணர்த்துகிறது. 🛕 இந்த போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போற்றும் வகையில் ஆயுத பூஜையானது கொண்டாடப்படுகிறது. இந்த போரில் வெற்றி பெற்ற நாளையே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. Saraswathi Pooja Procedure in Tamil வீட்டில் சரஸ்வதி பூஜை வழிபடும் முறை 🛕 முதலில் வீட்டை கங்கை நீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் முன் பகுதியில் தாமரைப் பூ போன்ற மாக்கோலம் போடப்பட வேண்டும். பின் வீட்டில் தோரணம் கட்டி ப...

Deepavali - Diwali Festival History in Tamil

படம்
[ad_1] Read Diwali History in English Deepavali in Tamil தீபாவளி 🎆 தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 🎆 இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17 லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. Diwali Festival History in Tamil தீபாவளி பிறந்த கதை 🎆 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். 🎆 இராமன் பதினா...

பங்குனி உத்திரம் - Panguni Uthiram in Tamil

படம்
[ad_1] Panguni Uthiram History in Tamil பங்குனி உத்திரம் 🛕 பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். 🛕 குதிரைகள் பூட்டிய தேரில் முருகப் பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார். 🛕 இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த த...

சங்கடஹர சதுர்த்தி - Sankatahara Chaturthi in Tamil

படம்
[ad_1] Sankatahara Chaturthi in Tamil சங்கடஹர சதுர்த்தி விரதம் வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. “சங்கட” என்றால் “துன்பம்”, “ஹர” என்றால் “அழித்தல்”. துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற...

Ratha Saptami in Tamil - ரத சப்தமி

படம்
[ad_1] Ratha Saptami in Tamil ரதசப்தமி உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார். அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது. ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியன் உதயம் சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி...

அட்சய திருதியை என்றால் என்ன? Akshaya Tritiya in Tamil

படம்
[ad_1] Akshaya Tritiya in Tamil அட்சய திருதியை அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அட்சய திருதியை நாளில், இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்! சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். “வளருதல்” என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்! ஆதிசங்கர...

Viratham and Benefits in Tamil

படம்
[ad_1] Viratham and Benefits in Tamil விரதங்களும் அவற்றின் பலன்களும் 🛕 நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன. Somavara Viratham Benefits in Tamil சோமவார விரதம் நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்தெய்வம் : சிவபெருமான்விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை.சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது. Pradosham Benefits in Tamil பிரதோஷம் நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள்...

Chithirai Matha Viratham - சித்திரை மாத விரதங்கள்

படம்
[ad_1] Chithirai Matha Viratham 🛕 பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். 🛕 சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள் 🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கோண்டாடுகின்றனர். அன்றைய தினம் காலையில் நீராடி உடலையும், வீட்டையும் சுத்தப்படுத்தி சூரிய உதயத்தை தரிசித்து குடும்பத்துடன் தங்களது குலதெய்வத்தின் கோவிலுக்கோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று இறைவனை வழிபடவேண்டும். 🛕...

Mayana Kollai in Tamil - மயானக் கொள்ளை திருவிழா

படம்
[ad_1] Mayana Kollai in Tamil மயானக் கொள்ளை 🛕 மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. 🛕 துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை. 🛕 பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமாகக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதி...

Rama Navami Viratham, Pooja & Mantra in Tamil

படம்
[ad_1] Rama Navami in Tamil ராம நவமி என்றால் என்ன? சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்துக்களின் மிக முக்கிய விரத நாளகா கடைப்பிடிக்கப்படுகின்றது. Rama Navami Viratham in Tamil ராம நவமி விரத முறை ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர். இவ்வாறு ராமர் ...

மகா சிவராத்திரி - Maha Shivaratri in Tamil

படம்
[ad_1] சிவராத்திரி ஐந்து வகைப்படும்: நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி Maha Shivaratri 2024 in Tamil மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் (மாசி மாதம் 6-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது. ‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும்.  சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக...

திருவாதிரை ஆருத்ரா தரிசனம் - Thiruvathirai & Arudra Darisanam

படம்
[ad_1] Thiruvathirai Viratham in Tamil திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. Arudra Darisanam in Tamil மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும். இது ஆருத்ரா தரிசனம் என வழங்கப்படுகிறது. தாருகா வனத்து முனிவர்கள் ...

மார்கழி மாத சிறப்புகள் - Margazhi Month Special in Tamil

படம்
[ad_1] Margazhi Month Special in Tamil மார்கழி மாத சிறப்புகள் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார். உத்தராயணம், தக்ஷிணாயணம் காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர். மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை மு...

Fire Walking Festival in Tamil

படம்
[ad_1] Fire Walking Ceremony in Tamil தீமிதி திருவிழா என்பது அம்மன் கோவில்களில், நெருப்புப் படுக்கையில், வெறுங்காலுடன் நடக்கும் ஒரு புண்ணிய செயல்! தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது! இது முக்கியமாக தெய்வங்களை, அதுவும் குறிப்பாக, அம்மனை மகிழ்விக்கும் ஒரு புனித செயலாக கருதப்படுகிறது. இந்த தீமிதித் திருவிழா முக்கியமாக தென்னிந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது, மேலும் இது சில ஆசிய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில், சமீபத்தில் தீமிதித் திருவிழா நடைப்பெற்றது, மேலும் இந்த கோவில், புகழ்பெற்ற பாண்டவ ராணி மா திரௌபதி அம்மனின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது, மேலும் மா திரௌபதி சக்திதேவியின் அம்சமாகவும் கருதப்படுகின்றாள். தமிழ் மாதங்களான ஆடி, ஆவணி மாதங்களில், பெரும்பாலும் சக்தி தேவி கோவில்களில், தீமிதித் திருவிழா  நடைபெறுவது வழக்கம். “மா அக்னி தேவி அம்மன்” என்று அம்மன் அழைக்கப்படுவதால், மற்றும் அக்னி தீப்பிழம்பு வடிவில் அம்மன் தோன்றுவதாக நம்பப்படுவதால், தீமிதித...