[ad_1]
- Advertisement - ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யும் பொழுது அந்த காரியத்தில் வெற்றி என்பது ஏற்பட வேண்டும் என்ற முழு நோக்கில் தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பார்கள். அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது தோல்வியை கண்டாலோ துவண்டு விடாமல் திரும்பவும் முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். அந்த முயற்சியை கைவிடாமல் முருகப் பெருமானின் இந்த ஒரு வரி மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு அந்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அந்த ஒரு வரி மந்திரம் என்ன என்பதை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். காரிய வெற்றி ஏற்படவும், முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகவும், நினைத்தது நடைபெறவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பல தெய்வங்களை நாம் வழிபாடு செய்வோம். பல தெய்வங்களுக்கு உரிய மந்திரத்தை நாம் உச்சரிப்போம். அப்படி உச்சரிக்க கூடிய ஒரு மந்திரமாக திகழ்வதுதான் முருகப்பெருமானின் இந்த ஒரு வரி மந்திரம். இந்த மந்திரமானது சிவபெருமானால் முருகப்பெருமானுக்கு கூறப்பட்டது என்று கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை நாம் உச்சரிக்க வேண்டும். - Adv