பாம்பாட்டி சித்தர் பாடல்கள் - Pambatti Siddhar Padalgal
[ad_1]
Pambatti Siddhar Padalgal பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர். பாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வணக்கம் தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே – சிவன்சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பேஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. 1 நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றேநித்திய மென்றே பெரிய முத்தி யென்றேபாடுபடும் போதுமாதி பாத நினைந்தேபன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. 2 பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. 3 எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்தஈசன் பதவ...