Cosmic Law Rock Art in Tamil
[ad_1]
Cosmic Law Rock Art in Tamil பிரபஞ்ச ரகசியப் பாறை ஓவியம் நெல்லை அருகே கண்டுபிடிப்பு அண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ அமைப்பின் நிறுவனர் குமாரவேல் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், ஐய்யனார் குளத்தின் மலைப்பகுதியில் மேற்கொண்ட பரப்பாய்வின் போது வெள்ளை நிறத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றைப் பற்றி அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ள செய்தியாவது, அந்தப் பாறை ஓவியங்களில் குறிப்பாக கோலம் போன்ற அமைப்புடைய பாறை ஓவியம் ஒன்று மதுரை மாவட்டம் கொங்கர் புளியங்குளம் பாறையிலும், குஜராத் இராட்டிரகுத்தா செப்பேட்டில் ஒரு குறியீடாகவும், 5500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி முத்திரை எண் எம்-507 எ,பி-யின் ‘பி’ புறத்தில் ஒரு குறியீடாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. கோலம் என்னும் சொல் புள்ளிகளை வைத்து அதனைச் சுற்றிலும், நேர்க்கோடுகள், வளைவுக்கோடுகள், சுழல்கள் என அழகாக வரைதல் என்பது அதன் பொருளாகும். தமிழகத்தின் இல்லத்தரசிகள் தத்தம் குடியிருக்கும் வீட்டு வாசல்களில் ...