இடுகைகள்

lordmurugan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Thirumalai Kovil Panpoli | பண்பொழி திருமலை முருகன் கோவில்

படம்
[ad_1] திருமலைக்கோவில் (Thirumalai Kovil Panpoli) தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பண்பொழி என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் ‘திருமலை முருகன்’ என்றும் ‘திருமலை முத்துகுமாரசுவாமி’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் ‘திருமலை’ என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் ‘திருமலை அம்மனுக்கான’ ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது. குற்றாலம் சென்று குளிக்கச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டால் உடனே பதில் வந்துவிடும்… எங்கிருந்தெல்லாமோ வருகிறார்

ஓதிமலைமுருகன் கோவில் | ஓதிமலை முருகன் கோவில்

படம்
[ad_1] ஓதிமலை முருகன் கோவில் சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை (ஓதிமலை முருகன் கோவில்), இங்கு பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்ளிட்ட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகள், மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும். 🌼 புஞ்சைப்புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.. 🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான

குழந்தை பாக்கியம் பெற | kulanthai pakkiyam pera

படம்
[ad_1] - Advertisement - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. வருடாவருடம் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தப் 10 நாள் திருவிழாவில், ஒவ்வொருநாளும்  கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாத்து வைக்கப்படுகிறது. பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் இரவு அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படுகிறது. அன்று இரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடத்தப்பட்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது ஏறி நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். அந்த ஒரு எலுமிச்சை பழம் கிட்டதட்ட 20 ஆயிரடம் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த வருடம் நடந்த ஏலத்தில் 10 எழுமிச்சை பழங்களும் சேர்த்து 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது. - Advertisement - இந்த எலுமிச்சை

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

படம்
[ad_1] - Advertisement - இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். சென்னை, திருவேற்காட்டை சேர்ந்தவர் பாலாஜி, 30 வயதான இவர் ஒரு சிவன் கோவிலில் உள்ள முதியவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கந்தசஸ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் வந்து விரதம் இருப்பது பாலாஜியின் வழக்கம். அதே போல அவர் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்தடைந்தார். - Advertisement - கந்தசஷ்டி விழாவின் நான்காவது நாளன்று அவர் விரதம் இருந்துகொண்டிருக்கையில் பசுமை சித்தர் என்றழைக்கப்படும் வைத்தியலிங்கம் என்பவர் பாலாஜிக்கு ஓம், முருகா, ஓம் முருகா போன்ற வார்த்தைகளை சொல்ல கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சி அன்றைய நாள் முழுக்க தொடர்ந்தது. யாரும் எதிர்பாராத வண்ணமாக அன்று மாலை பாலாஜி, ஓம் முருகா என்று ஓரளவிற்கு சொல்ல துவங்கினார். இதனை அடுத்து பயிற்சியின் அடுத்த கட்டமாக அம்மா, அ