Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil
[ad_1]
Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil 🛕 தமிழகத்தை அரசாண்ட மாமன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ளதும், மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டதுமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவானது – 🛕 இறைவன் அல்லது இறைவி தெய்வத் திருக்கோலம் பூண்டு எழுந்தருளியுள்ளது மூலவர் கருவறை என்னும் கர்ப்பக்கிருகம். மூலவர் என்பது ஆதியானவர் அல்லது முதன்மையானவர் என்பதால் அக்கர்ப்பகிருகத்திற்கு மூலத்தானம் என்றச் சிறப்புப் பெயருண்டு. 🛕 அந்த மூலத்தானத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்களை திருச்சுற்றுக்கள் என்பர். தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்கள் மூன்று திருச்சுற்றுக்கள் என்னும் மூன்று பிரகாரங்களைக் கொண்டவை. 🛕 மூலத்தானத்தைச் சுற்றி வருவதற்தாக முதலாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை முதல் பிரகாரம் என்றும், இரண்டாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை இரண்டாம் ...