[ad_1]
- Advertisement - அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவன் அருள் பெற மந்திரம் சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம்.