இடுகைகள்

பொதுநட்சத்திரகணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரேவதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ரேவதி நட்சத்திரம் புதனின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் இரக்க சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் அழகான தோற்றம் கொண்டிருப்பீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். பல மொழிகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையையும் சமயோசித அறிவால் சமாளித்துவிடுவீர்கள். நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். மற்றவர்களும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' என்று விரும்புவீர்கள். வயதை கணித்துச் சொல்லமுடியாதபடி இளமையான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அனுபவ அறிவு அதிகம் பெற்றிருப்பீர்கள். வாழ்க்கையில் பிரச்னைகளுடன் கஷ்டப்படுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வீர்கள். பார்வையாலேயே மற்றவர்களை வசியப்படுத்திவிடுவீர்கள். உறவினர்களுடன் பழகுவதை விடவும் நண்பர்களுடன் பழகுவதையே விரும்புவீர்கள். வாழ்க்கைத்துணையிடம் அதிக அன்பு கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் பெரிய சாதனை புரிய நினைப்பீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

உ த்திரட்டாதி நட்சத்திரம் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். போலி வேஷம் போடுவது உங்களுக்கு அறவே பிடிக்காது. எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பீர்கள் என்பதால், உங்களிடம் ஒரு வார்த்தை வாங்குவதுகூட கடினமாக இருக்கும். அறிஞர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். பயணங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். உங்களிடம் இருக்கும் ஆன்மிக நாட்டத்தின் காரணமாக நீங்கள் செல்லும் ஊர்களில் இருக்கும் கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பல விஷயங்களையும் அறிந்திருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாகப் பழகுவீர்கள். உங்களில் சிலருக்கு வேத சாஸ்திரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும். பூமியைப் போல் பொறுமையாக இருந்தாலும், அநியாயம் கண்டு பூகம்பமாக வெடிப்பீர்கள். உங்களுடைய பழகும் த

பூரட்டாதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

பூரட்டாதி குருபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதம் கும்பராசியிலும் நான்காவது பாதம் மீனராசியிலும் அமையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவருடனும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகும் மனம் கொண்டிருப்பீர்கள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்பவர்களாக இருப்பீர்கள். எந்த நிலையிலும் தவறான வழிக்குச் செல்ல மாட்டீர்கள். உணவு சுவையாகவும் தரமாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப் பீர்கள். எப்போதும் உயர்வான விஷயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்பம் துன்பம் எது வந்தாலும் அதனால் மகிழ்ச்சியோ வருத்தமோ அடையமாட்டீர்கள். எதிர் காலத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகளை அவ்வப் போது சுயமதிப்பீடு செய்துகொள்வீர்கள். மற்றவர்களின் செயல்களையும் விமர்சிப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அமைத்துக்கொள்வீர்கள். உயர்ந்த கல்வியறிவு பெற்றிருப்பீர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத

சதயம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ந ட்சத்திர வரிசையில் 24-வதாக வருவது சதய நட்சத்திரம். ராகு பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சதயம் நட்சத்திரம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருப்பீர்கள். அன்புக்கு அடிபணியும் நீங்கள் அதிகாரத்துக்குப் பணியமாட்டீர்கள். உங்களைக் கண்டால் எதிரிகளும் அஞ்சி நடுங்குவர். கடல் கடந்து பயணம் மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். ஆலயப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பு அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பையும் அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். இளம்பருவத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் நீங்கள் பிற்காலத்தில் உயர்ந்த லட்சியத்தை மேற்கொண்டு, அதை அடைவதற்காகப் பாடுபடுவீர்கள். துர்கையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருப்பீர்கள். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். மற்றவர்களும் அப்படி நடக்கவே

அவிட்டம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். திருவோணம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். நட்சத்திர தேவதை:  அஷ்ட வசுக்கள் வடிவம்:  மத்தள வடிவமுடைய 4 நட்சத்திரங்களின் தொகுப்பு. எழுத்துகள்: க, கி, கு, கூ. அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்: செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே இது தேவ நட்சத்திரம் என்கிறது ஒரு நூல். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசுவார்கள், தாய், தந்தையைத் தனித்து விடாமல் அவர்களுடைய ஆயுட்காலம் வரை பேணிக் காப்பவர்; பொன், வெள்ளி ஆபரணங்களை அணிபவர்; பூமி அதிரும்படி நடக்காமல் மென்மையாக நடப்பவர்; கலைகள் பல

திருவோணம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ச ந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் திருவோணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லோரிடமும் இரக்கம் காட்டுவீர்கள். மனிதாபிமானம் மிக்கவர்களாக இருப்பீர்கள். 'கோபம் இருக்குமிடத்தில் குணமும் இருக்கும்' என்பதற்கேற்ப கோபப்பட்டாலும், உடனே மறந்து மன்னித்து விடுவீர்கள். எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பீர்கள். தாயிடம் அன்பும் தெய்வ பக்திக்கும் மேலான பக்தியும் கொண்டவர்களாக இருப்பீர்கள். கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் மிக்கவர்கள். இருக்கும் இடம் முதல் உடுத்தும் உடை வரை மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். செலவு செய்வதில் கணக்கு வழக்கு பார்த்தாலும், மற்றவர் களுக்கு உதவி செய்வதில் கணக்குப் பார்க்க மாட்டீர்கள். எங்கு சென்றாலும் நம் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் கௌரவமும் புகழும் பெறுவீர்கள். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட் டீர்கள். லட்சியத்தை அடைவதில் எத்தனை குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் சோர்வில்லா

உத்திராடம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

சூ ரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமையும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகமிருக்கும். மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த தயங்காதவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டீர்கள். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டுவதுடன் அவர்களின் நலனுக்காகப் போராடவும் தயங்கமாட்டீர்கள். உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். மக்களிடையே விழிப்பு உணர்வும் பிரசாரங்களை மேற்கொள்வீர்கள். எப்போதும் இளமைத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். எங்கும் எதிலும் தலைமை ஸ்தானத்தில் இருப்பீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களைப் பல வகைகளிலும் கவர்ந்து விடுவீர்கள். பல கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள்

பூராடம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

சு க்கிரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் பூராடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே சுக்கிர தசை வருவதால், அதற்கு உரியப் பலன்கள் தந்தைக்குக் கிடைக்கும். பூராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர தசை பல வருடங்களுக்கு நடைபெறும் என்பதால், அனைத்து வசதி வாய்ப்புகளையும் இளமையிலேயே பெற்று மகிழ முடியும். பூராடம்  நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கலை ரசனையை உணர்த்தும் நீண்ட மெல்லிய விரல்களைப் பெற்றிருப்பீர்கள். மேலும் மேலும் கற்கவேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். கோபத்திலும்கூட அழகாகத் தெரிவீர்கள். ஆண்களாக இருந்தால் சற்றே பெண்மையின் நளினம் இழையோடும். பெண்களாக இருந்தால் ஆண்மையின் மிடுக்குடன் காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை போராடியாவது முடித்துக் காட்டுவீர்கள். பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவீர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல

மூலம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

கே துவின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம் மூலம். 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' என்று சொல்வது உண்டு. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் இதில் உண்மை இல்லை. 'ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்' என்று சொல்வதுதான் சரி. ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சந்திரன் தனுசு ராசியில் இருக்கும். அப்படி தனுசு ராசியில் இருக்கும் சந்திரனை மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் இருக்கும் குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு நாடாளும் யோகம் ஏற்படும். அதேபோல் மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதுதான் சரி. அனுமனின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெற்றோரையும் பெரியோர் களையும் மதித்து நடப்பீர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள். பொறுமையின் சிகரமாகத் திகழ்வீர்கள். ஆனால், அநியாயம் செய்பவர்களைக் கண்டால் பொங்கி எழுவீர்கள். நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவ

கேட்டை நட்சத்திரம் பொதுவான குணங்கள்

பு தனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் கேட்டை. 'கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள்' என்று ஒரு பழமொழியே உண்டு. கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பீர்கள். இயல்பிலேயே நல்ல குணங்களைப் பெற்றிருப்பீர்கள். ஆனாலும், அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருத்தப்படச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பீர்கள். எப்போதும் முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுவீர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்துவிடுவீர்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவீர்கள். அடிக்கடி எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டு

அனுஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ச னிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், கவர்ச்சியான தோற்றம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பீர்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாகக் காணப்படுவீர்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டுமென்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாக இருப்பீர்கள். அமைதியையே எப்போதும் விரும்புவீர்கள். ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சுயமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருப்பீர்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டீர்கள்.

விசாகம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

கு ருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காவது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவீர்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மன அடக்கமும் புலனடக்கமும்கொண்டிருப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பீர்கள். கொண்ட கொள்கைகளில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பீர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மிகவாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பீர்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவீர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்ற

சுவாதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ரா கு பகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக வருவது சுவாதி. துலாம் ராசியில் இடம் பெறும் சுவாதி நட்சத்திரம் மிகவும் பிரகாசமான நட்சத்திரம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பு மனமும் இரக்க சுபாவமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் அளவுக்கு இளமைத் தோற்றமும் அழகும் கொண்டிருப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். பல துறைகள் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதன் காரணமாக பல துறைகளிலும் விவாதிக்கும் திறமை பெற்றவர்களாகத் திகழ்வீர்கள். பல நூல்களைப் படித்திருந்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உங்களுக்குப் பூரணமாக இருக்கும். உதவி என்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டீர்கள். அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவற மாட்டீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தை எப்பட