இடுகைகள்

rasam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாண வீட்டு ரசம் ரெசிபி | Kalyana veetu rasam

படம்
[ad_1] - Advertisement - கல்யாண வீட்டுக்கு போனா இந்த ரசத்தில் இருக்கும் ருசியை, வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. லேசான பருப்பு வாசத்துடன் கமகமக்கும் ரசம் இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று ஏங்குவோம். கேட்டு கேட்டு சாதத்தில் ஊற்றி சாப்பிடுவோம். இதே போல ரசம் தினமும் வீட்டில் கிடைக்காதா என்று யோசிப்பவர்களும் உண்டு. அதற்காகத்தான் கல்யாண வீட்டு ரசம் ரெசிபியை அப்படியே இந்த பதிவில் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்திருக்கின்றோம். தேவைப்படுபவர்கள் படித்து பலன் பெறவும். ரசப்பொடி செய்முறைதுவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 4, வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் சூடான கடாயில் போட்டு வாசம் வரும் வரை லேசாக வருத்து அடுப்பை அணைத்து, ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - அடுத்து வேக வைத்த துவரம் பருப்பு 1/4 கப் நமக்கு தேவை. குக்கரில் துவரம் பருப்பை போட்டு மஞ்சள் தூள் போட்டு, கொஞ்சமாக எண்ணெய் விட்டு நன்றாக வேக