[ad_1]
ஒரே நாளில் மூன்று நரசிம்ம தரிசனம் (மூன்று நரசிம்மர் கோவில்கள்) பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, இந்தியாவில் பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அண்டிலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பரிக்கல் : விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார