இடுகைகள்

Vishnu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயதேவர் (ஸ்ரீ விஷ்ணு தாசர்கள்) - Vishnu Bhagavata Jayadeva

படம்
[ad_1] Vishnu Bhagavata Jayadeva History in Tamil ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ ஜெயதேவர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்: ஜயதேவர் ஸ்ரீ மகாகவி ஜயதேவரது சரிதம் அற்புதங்கள் நிறைந்தது. பில்வகாம் என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் ஈடுபட்ட மனத்தை உடையவருமான, நாராயண சாஸ்திரியார் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியின் திருநாமம் கமலாபாய். முற்றும் துறந்த முனிவரைப்போல வாழ்ந்த இப்பெரியாருக்குத் தமக்குப் பின் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே, என்ற எண்ணம் எழ வில்லை. இறைவனது வழிபாட்டிலும் பஜனையிலுமே இவர் மனம் நிறைந்திருந்தது. ஒரு நாள் இரவு நாராயண சாஸ்திரியார் தம் ஆராதனைகளை முடித்து இறைவனது நாம சங்கீர்த்தனத்திலே ஈடுபட்டு, நாமாவளிகளைப் பாடிய வண்ணம் கண் அயர்ந்து விட்டார். அழகிய ஒளி மயமானதோர் உலகத்திலே ஸ்ரீமந்நாராயணர் முகத்திலே புன்னகை தவழ சங்கு சக்ர கதாதர ராய் வந்து நின்றார். “ஏ பக்தா உ...

கபீர்தாஸர் (ஸ்ரீ விஷ்ணு தாசர்கள்) - Vishnu Bhagavata Kabirdas

படம்
[ad_1] Vishnu Bhagavata Kabirdas History in Tamil ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ கபீர்தாஸர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்: ஸ்ரீ கபீர்தாஸர் கபீர்தாசர் என்னும் பெயரை எண்ணும் பொழுதே இறைவன் ஸ்ரீ ராமபிரானது உருவம் நம் கண் முன்னே தோன்றுகிறது. கபீர்தாஸருடைய கவிதைகள் பாரத நாடு முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். இவரது மதத்தை சூஃபி தத்துவத்தை தம்முட்க்கொண்டது என்றும் கூறுவர். இவர் பிறவியிலே முஸல்மான் தெய்வ பக்தியிலே இவருக்கு இணை இவர் தாம். இவர் கவிதைகளை கேட்போர் மெய்மறக்கச் செய்யும் மந்திர சக்தி வாய்ந்தவை. இராமன் என்று வேண்டுமானாலும் சொல் ரஹீம் என்று வேண்டுமானாலும் சொல் இறைவன் ஒருவனே என்பதே இவர் கொள்கை. இவரது மதத்தை கபீர் பந்த் என்றே வழங்குகிறார்கள். இன்றும் பல்லாயிரக்கணக்கான மெய்யடியார் இவரது மார்க்கத்தை கடைப்பிடித்து பக்தி செய்து பேரின்பப் பெருவீட்டை அடைய காத்து நிற்பதைக் காண்கிறோம். பஜனை சம்பிரதாயத்திலும் ஹரிகதா காலக்ஷேபங்களிலும் கபீர்தாஸருடைய பாடல்களே நிறைந்து நிற்கும். இத்தகைய மகானது வரலாறு இ...

ஸ்ரீ போசல பாவா (விஷ்ணு தாசர்கள்): Vishnu Bhagavata Posala Bhava

படம்
[ad_1] Vishnu Bhagavata Posala Bhava History in Tamil ஸ்ரீ போசல பாவா பண்டரிபுரத்தின் அருகேயுள்ள செல்வம் கொழிக்கும் சிற்றூர் பாலகாடு என்பது. அவ்வூரிலே பல பிரிவினர் வாழ்ந்தாலும், வேளாளர்களே மிகுந்த செல்வம் படைத்திருந்தனர். அந்த வேளாளர்க்குள்ளேயும் மிகுந்த செல்வம் படைத்தவர் போசல பாவா. இவரது மனைவி மமதா பாய் மிகவும் நல்லவள். இவர்களுக்கு ஏமாஜி என்ற ஒரே மகன். அவனும் தாய்தந்தையரைப்போல சிறந்த நற்பண்புகள் பெற்றவன். இந்தச் சமயத்திலே, நாட்டிலே கடும் பஞ்சம் தோன்றியது. போசல பாவாவின் நிலத்திலும் விளைச்சல் இல்லை. மாதந்தோறும் ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியிலே பலருக்கு அன்னதானம் செய்து வருவது வழக்கம். தசமியன்றே புறப்பட்டு பண்டரிபுரம் சென்று அன்றும் மறுநாளும் தங்கி, துவதாசியிலே அன்னதானம் செய்வார். இந்தக் கடும் பஞ்சத்திலும் பிடிவாதமாக இப்பணியினை நிறைவேற்றி வந்தார் போசலபாவா. வறுமை வந்து விட்டதே என்று கடமையை விட முடியுமா? என் அப்பன் பண்டரிநாதனைப்பாராமல் இருக்கவும் முடியுமா? போகத்தான் வேண்டும் என்று நினைத்தார் அவர். தந்தையும் மகனுமாய்ப்போய் காட்டிலே விறகு வெட்டி கொணர்ந்து விற்...