சத்தான ராகி ஊத்தாப்பம் செய்முறை | healthy ragi uthappam preparation in tamil
[ad_1]
- Advertisement - சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிமிணர்கள் கூறுகிறார்கள். சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் பல குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பது. அந்த வகையில் இரும்பு சத்து மிகுந்த கேழ்வரகு அதாவது ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள், ராகியை வைத்து கழி கிண்டுவது, ராகி புட்டு செய்வது, ராகி தோசை செய்வது, ராகி இட்லி செய்வது என்று பல விதங்கள் இருந்தாலும் அதை செய்வதில் குடும்பத் தலைவிகளுக்கு சிறிது சிரமம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சிரமத்தை தவிர்த்து விட்டு ராகியை வைத்து எளிமையான முறையில் ஊத்தாப்பம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ராகி மாவ...