நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ்
[ad_1]
நவ கைலாய தலங்கள் | நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ் – அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.நவ கைலாயம் தலங்களின் விபரம்:- சூரிய தலம்...தலம்: பாபநாசம்அம்சம்: சூரியன்நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருபத்திடம்: திருநெல்வேலியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்து, அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய