இடுகைகள்

கதரநத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேதார்நாத் கோவில் வரலாறு தமிழ் | கேதார்நாத் கோயில் முக்கோண வடிவ லிங்கம்

படம்
[ad_1] இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் #கேதார்நாத்_கோயில் : முக்கோண வடிவ லிங்கம் உள்ள அதிசய கோயில் இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்தக் கோயிலைச் சிறு துரும்பும் அந்தச் சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்தக் கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது. பெரும் வெள்ளத்தால் அந்த பகுதியே சிதைந்தாலும் கோயில் தன் கம்பீரத்தைக் கைவிடாமல் நிலைத்திருக்கிறது. வாருங்கள் அந்த கோயிலின் சிறப்பைக் காணலாம்!இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பித்த கேதார்நாத் கோயில் இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகவும் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச கேதார ஆலயங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும் அமைந்த சிறப்பைப் பெற்றது. மேலும் இந்த கோயிலானது பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கேதர்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிகவும் பயங்கரமான வெள்ளம் மற்றும் நிலச்