இடுகைகள்

recipe லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தக்காளி பிரியாணி ரெசிபி | Thakkali briyani recipe

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் தக்காளி பிரியாணி மணக்க மணக்க கோயம்புத்தூர் ஸ்டைலில் இப்படி ஒரு முறை செய்து பாருங்க, எல்லோரும் கறி சோறு மாதிரி இருக்கு என்பார்கள். பிரியாணி வாசம் தோத்து போகும் அளவிற்கு, ரொம்பவே ஈஸியாக செய்யக்கூடிய இந்த தக்காளி பிரியாணி எப்படி கொங்கு நாட்டு ஸ்டைலில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் : பிரியாணி குருணை – 2 ஆழாக்கு பெங்களூர் தக்காளி – ஐந்து பெரிய வெங்காயம் – இரண்டு கடலை எண்ணெய் – தேவையான அளவு பச்சை மிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு சோம்பு – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தக்காளி பிரியாணி செய்முறை விளக்கம் : தக்காளி பிரியாணி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எ...

பேச்சுலர்ஸ் ரெசிபி வெங்காயம் சாதம் | Bachelors recipe vengaya sadham

படம்
[ad_1] - Advertisement - பெரும்பாலும் பேச்சுலர்ஸ் அதிகமாக செய்யக் கூடிய ரெசிபிகள் சுலபமானதாகவும், சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்த வகையில் பேச்சுலர்ஸ் அதிகம் விரும்பும் வெங்காய சாதம் இப்படி நாமும் வீட்டில் ட்ரை பண்ணி பார்க்கலாமே! பத்து நிமிடத்தில் செய்து அசத்தக்கூடிய இந்த வெங்காய சாதம் சாப்பிடும் பொழுதே வாயில் எச்சிலை ஊற வைக்கும். அந்த அளவிற்கு சுவையாக செய்யக்கூடிய இந்த வெங்காய சாதம் எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்ப்போம் பாருங்கள். வெங்காய சாதம் செய்ய தேவையான பொருட்கள் : சமையல் எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் சீரகம் – கால் டீஸ்பூன் சோம்பு – கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று பெரிய வெங்காயம் – மூன்று மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் மல்லித்தூள் – ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து உப்பு போட்டு வடித்த சாதம் – ஒரு ஆழாக்கு வெங்காய சாதம் செய்முறை விளக்கம் : வெங்காய சாதம் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும்...

சிகப்பு அவல் லட்டு ரெசிபி | Sigappu aval laddu recipe

படம்
[ad_1] - Advertisement - சிகப்பு அவல் உடலுக்கு பல வகையான நன்மைகளை செய்யக் கூடியது. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள், உடலை திடகாத்திரமாக வலுவாக்குகிறது. உடல் பலகீனமானவர்கள் அடிக்கடி சிகப்பு அவலை ஏதாவது ஒரு முறையில் உணவில் சேர்த்து வருவது நன்மை தரும். ரத்த சோகைக்கு மருந்தாக அமையும். குடல் புண்ணை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோயை கூட தடுக்கும், குண நலன்களை கொண்டுள்ளது. பாரம்பரியமாக இந்த சிகப்பு அவலை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்களை உடலில் செல்லாமல் தடுக்கும். இவ்வளவு அளப்பரிய நன்மைகளைக் கொண்டுள்ள சிகப்பு அவல் கொண்டு சுவையான லட்டு எளிதாக தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம். சிகப்பு அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள் : - Advertisement - சிகப்பு அவல் – ஒரு கப் தேங்காய் துருவல் – அரை கப் நெய் – 3 ஸ்பூன் முந்திரி, பாதாம், திராட்சை போன்ற நட்ஸ் வகைகள் – அரை கப் பொடித்த வெல்லம் – அரை கப் ஏலக்காய் – இரண்டு சிகப்பு அவல் லட்டு செய்முறை விளக்கம் : இந்த லட்டு...

காரசாரமான காரச்சட்னி ரெசிபி | Karasaramana kara chutney recipe

படம்
[ad_1] - Advertisement - காரசாரமாக பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு ரொம்பவே ஈஸி தான். இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு சூப்பரான, சரியான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த ஹோட்டல் ஸ்டைல் கர்நாடகா கார சட்னி வீட்டிலேயே எப்படி சுலபமான முறையில் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள போகிறோம். கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – மூன்று தக்காளி – இரண்டு காஷ்மீரி மிளகாய் – 12 பூண்டு பற்கள் – நான்கு கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க : - Advertisement - எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன் கடலை பருப்பு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன். கர்நாடகா ஸ்டைல் காரச் சட்னி செய்முறை விளக்கம் : கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளு...

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சட்னி | hemoglobin athigarikkum chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதில் மிகவும் அதீத உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்களாகவே திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு அதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிக அளவில் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு. இவற்றை சரி செய்வதற்கு கடைகளில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இரும்பு சத்து மிகுந்த பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருட்களுள் ஒன்றுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளரும், கண்பார்வை தெளிவடையும், ரத்த அழுத்தம் ச...

சுவையான மஸ்ரூம் சாதம் ரெசிபி | Suvaiyana mushroom sadam recipe

படம்
[ad_1] - Advertisement - டிபன் பாக்ஸ் ரெசிபிகளில் ரொம்பவும் வித்தியாசமான இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் அமையப் போகிறது. காளான் வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்வது உண்டு. அதில் இந்த முறையில் ஒருமுறை மஸ்ரூம் ரைஸ் செய்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க! அனைவரும் விரும்பும் சுவையான காளான் சாதம் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். மஸ்ரூம் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் : மஸ்ரூம் – ஒரு கப்சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்றுசோம்பு – கால் ஸ்பூன்பச்சை மிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள் – 2 சிட்டிகைமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்கரம் மசாலா – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுகறிவேப்பிலை – ஒரு கொத்து - Advertisement - அரைக்க:சின்ன வெங்காயம் – 10பூண்டு பல் – மூன்றுவரமிளகாய் – நான்குதக்காளி – ஒன்று மஸ்ரூம் ரைஸ் செய்முறை விளக்கம் : இந...

தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை | Thanjavur orappu adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. தேவையான பொருட்கள்: - Advertisement - இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொ...

தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே போல சட்னி செய்து கொடுத்து வருபவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக அமையப் போகிறது. கருப்பு உளுந்து கொண்டு ஆரோக்கியமான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும், இன்னும் இந்த சட்னிக்காகவே வேண்டும் வேண்டும் என்று சளைக்காமல் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள். தக்காளி உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பூண்டு பல் – 6 கருப்பு உளுந்து – 4 ஸ்பூன் கருவேப்பிலை – இரண்டு கொத்து தக்காளி – 4 கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – கால் ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – ஒன்று தக்காளி உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:...

சுவையான முட்டை கறி ரெசிபி | Suvaiyana muttai kari recipe

படம்
[ad_1] - Advertisement - சுட சுட சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட இந்த முட்டை கறி அட்டகாசமான நல்ல காம்பினேஷனாக இருக்கக்கூடும். எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து போர் அடித்து போனவர்களுக்கு, இந்த மாதிரி முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, முட்டை சேர்த்து ஒரு முறை முட்டை கறி செய்து கொடுத்து பாருங்கள், இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த முட்டை கறி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவு மூலமாக தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். முட்டை கறி செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - முட்டை – 4 முட்டைக்கோஸ் – 200 கிராம் உருளைக்கிழங்கு – 200 கிராம் நெய் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – இரண்டு ஸ்பூன் கடுகு – கால் ஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லி தழை – சிறிதளவு தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. முட்டை கறி செய்முறை விளக்கம்: முட்டை கறி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக...

வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

படம்
[ad_1] - Advertisement - வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய இந்த இனிப்பு வகையை வித்தியாசமான சுவையுடன் செய்வதற்கு எண்ணெயில் போட்டு பொரிக்காமல் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இந்த பணியார ரெசிபி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் தாராளமாக சாப்பிடலாம். அசத்தலான சுவையில் அருமையான வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம். வாழைப்பழம் வைத்து செய்யக் கூடிய இந்த ரெசிபி எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பராக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் வித்தியாசமான முறையில் நாம் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கும் பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பணியாரம் எப்படி செய்வது? பார்ப்போம். - Advertisement - வாழைப்பழ பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு சர்க்கரை – அரை கப் ஏலக்காய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு – அரை கப் துருவிய தேங்காய் – அரை கப் ரவை – அரை கப் நெய் – தேவையான அளவ...

ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - பாரம்பரியமாக பணியாரம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம்மில் பலர். பணியாரத்தை இன்று மறந்திருந்தாலும் பார்த்தவுடன் லபக்.. லபக்.. என்று வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வயிற்றுக்கு திருப்தியான இந்த பணியாரத்தை வித்தியாசமான முறையில் ஸ்டஃப்பிங் செய்து எப்படி ரொம்ப சுலபமாக சுவையாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். ஸ்டஃப்டு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று வர மிளகாய் – ஒன்று இஞ்சி – சிறு துண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு பல் – நான்கு கறிவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – 1 ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை விளக்கம்: இந்த பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃப் செய்வதற்கு உர...

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க...

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி...

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver...

மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்...

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – 500 கிராம் குங்குமப்பூ – ஒரு கிராம் ஏலக்காய் – 2 சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நேந்திரம் பழம் – 2 நெய் பொ...

பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டிலேயே உணவு வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு நாம் தயார் செய்து எடுத்துச் செல்லும் பொழுது பெரும்பாலும் இட்லி, சப்பாத்தி எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று எடுத்துச் செல்வோம். அப்பொழுதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக. அந்த சமயத்தில் இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி தயார் செய்வோம். இந்த சட்னியை சற்று பக்குவமாக தயார் செய்யாவிட்டால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும். இதற்காக பலரும் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி என்று சேர்த்து புதினா துவையலை செய்து எடுத்து வருவார்கள். இதற்கான மெனக்கெடு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காயை வைத்து எளிமையான முறையில் இந்த துவையலை செய்தோம் என்றால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவதாக இருந்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்ட...

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும...

கல்யாண வீட்டு கேசரி செய்முறை | Kalyana veetu kesari recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால் உடனே ஏதாவது ஒரு இனிப்பை செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரும் பழக்கம் இருக்கும். அதே போல் ஏதாவது ஒரு விசேஷமான நாளாக இருக்கும் பொழுதும் வீட்டில் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளை செய்து வைத்து பூஜை செய்யும் முறையும் இருக்கும். அப்படி செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கேசரி. விரைவிலேயே செய்து முடிக்கக்கூடிய கேசரியை எப்படி செய்தாலும் கல்யாண வீட்டில் சாப்பிடக்கூடிய கேசரி அளவிற்கு இல்லை என்பவர்கள் இந்த முறையில் கேசரி செய்தால் அல்வா போல தொட்டாலும் கையில் ஒட்டாமல் சுவையாக இருக்கும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாடி வந்து விட்டார்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று நினைக்கும் பொழுது நமக்கு ஆபத் பாண்டவனாக உதவக்கூடியது இந்த கேசரி தான். இந்த கேசரியை கல்யாண வீட்டு கேசரியாக சுவை மிகுந்ததாக மாற்றுவதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட...

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற...