மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil

[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் கொலஸ்ட்ராலை குறைக்கவும், சர்க்கரை நோயை குறைக்கவும், இரத்த சோகையை நீக்கவும் காளான் பயன்படுகிறது. - Advertisement - தேவையான பொருட்கள் காளான் – 250 கிராம் சீரகம் – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் தனியா – 1 1/2 டீஸ்பூன் பட்டை – 2 காய்ந்த மிளகாய் – 8 எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து பூண்டு இடித்தது – 1 1/2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 , மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு புளி கரைத்தது – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சீரகம், வெந்தயம், மிளகு, தனியா பட்டை, காய்ந்த மிளகாய் ஆறு இவற்றைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் வறுபட்ட பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்துள்ள காளானை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட வேண்டும். கடுகு வெடித்ததும் இடித்த பூண்டை அதில் சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். - Advertisement - வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு இதில் 50எம்எல் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும். காளான் நன்றாக வெந்த பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு கெட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் இவற்றை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். ஐந்து நிமிடம் இது நன்றாக வெந்த பிறகு நாம் மறைத்து வைத்திருக்கும் பொடியை இதன் மேல் தூவி ஒருமுறை நன்றாக கலந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் அசைவ சுவையில் அருமையான காளான் சுக்கா தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே ராஜ்மா மசாலா செய்முறை எந்த காய்கறிகளிலும் கிடைக்காத அற்புதமான சத்தான விட்டமின் டி இருக்கக்கூடிய காய்கறியாக திகழும் இந்த காளானை வாரத்தில் ஒரு முறையாவது வீட்டில் செய்ய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-mushro/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024