மகா சிவராத்திரி - Maha Shivaratri in Tamil
[ad_1]
சிவராத்திரி ஐந்து வகைப்படும்: நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி Maha Shivaratri 2024 in Tamil மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் (மாசி மாதம் 6-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது. ‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும். சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக...