இடுகைகள்

history லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Vilakku Thandu History in Tamil

படம்
[ad_1] Vilakku Thandu History in Tamil விளக்குத் தண்டு: நம் முன்னோரின் பாரம்பரிய ஒளி காவிரிப் பூம்பட்டினத்தின் பழங்காலத்திலிருந்து நம் தமிழர்கள் விளக்குத் தண்டு முறையை ஒரு புனிதச் சடங்காகக் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இது வெறும் விளக்கேற்றுதல் மட்டுமல்லாமல், இயற்கை, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பழக்கமாகும். புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் பொங்கல் விழா, விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. விளக்குத்தண்டு உருவான கதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டின பகுதியில் வாழ்ந்த வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் முன்னோர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் ஈட்டி வந்தனர். வெளிநாடு சென்றவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கு ஊர் திரும்புவது வழக்கம். ஒரு ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தவர்கள் கப்பலில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஆழி பேரலையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் வந்த வணிகர...

Patteeswaram Temple History in Tamil

படம்
[ad_1] Patteeswaram Temple History in Tamil தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஶ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவில் சிவஸ்தலம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் மூலவர் தேனுபுரீஸ்வரர், பட்டீசுவரர் அம்மன் ஞானாம்பிகை, பல்வளைநாயகி தீர்த்தம் ஞானவாவி புராண பெயர் மழபாடி, பட்டீச்சரம், பட்டீச்சுரம் தல விருட்சம் வன்னி ஊர் பட்டீஸ்வரம் மாவட்டம் தஞ்சாவூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பட்டீஸ்வரம் கோவில் வரலாறு பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வனத்தின் பெருமையையும், தூய்மை...

Thiruketheeswaram Temple History in Tamil

படம்
[ad_1] Thiruketheeswaram Temple History in Tamil சிவஸ்தலம் திருக்கேதீஸ்வரம் கேதாரீஸ்வரர் திருக்கோவில் மூலவர் திருக்கேதீச்வரர், கேதாரீஸ்வரர் அம்மன் கவுரி தல விருட்சம் வன்னி மரம் தீர்த்தம் பாலாவி மாவட்டம் மன்னார் மாவட்டம் நாடு இலங்கை தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இலங்கை திருக்கேதீச்வரர் கோவில் வரலாறு கேது பகவான் இக்கோவிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. திருக்கேதீஸ்வரம் கோவில் என்று அழைக்கப்படும் கேதாரீஸ்வரர் கோவில்,  இலங்கையில் அமைந்துள்ள ஒரு பண்டைய சிவன் கோவிலாகும். இலங்கையின் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். காலப்போக்கில், இது பல்வேறு மன்னர்கள், பரோபகாரர்கள் மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு மற்றும் விரிவுபடுத்தப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து முக்கிய கோவில்களில் திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும். இந்தக் கோவில், பண்டைய சைவ புனிதர்களால் பாடப்பட்ட...

ஸ்ரீ ஜெயதீர்த்தர்: Teekacharya History in Tamil

படம்
[ad_1] Jayatirtha History in Tamil டீகாச்சார்யா (1365-1388) என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ ஜெயதீர்த்தர் அல்லது ஜெயதீர்த்தரு ஒரு புனித இந்து மத்வ துறவி மற்றும் மத்வாச்சார்யா பீடத்தின் ஆறாவது பீடாதிபதி ஆவார். இவர் மத்வ மரபில் மிக முக்கியமான புனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். துவைதத்தின் தத்துவ அம்சங்கள் குறித்த அவரது படைப்புகளுக்கு அவர் பெருமைக்குரியவர்.  மத்வர் மற்றும் வியாசதீர்த்தருடன் சேர்ந்து, அவர் மூன்று சிறந்த ஆன்மீக ஞானிகளில் ஒருவராக கருதப்படுகிறார். பிறப்பும் சந்நியாசமும்  சந்நியாசம் அடைவதற்கு முன்பு தோண்டுபந்த் என்பது இவரது இயற்பெயர். அவர் ஒரு வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தார், பின்னர் அவர் மத்வ துறவியான அக்ஷோப்ய தீர்த்தரை சந்தித்த பின்னர் துவைதத்திற்கு தத்தெடுத்தார். மத்வத்தின் படைப்புகள் தொடர்பான 22 படைப்புகளை அவர் செய்துள்ளார், மேலும் அத்வைத தத்துவத்தை விமர்சிக்கும் பல படைப்புகளையும் செய்துள்ளார். அவரது மகத்தான திறமையும், ஞானமும் அவருக்கு ‘டீகாச்சார்யா‘ என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அவர் பிறந்த இடம் மங்கள்வேதா அல்லது மான்யகேதா. இவரது தந்தை இர...

Vadiraja Tirtha History in Tamil

படம்
[ad_1] Vadiraja Tirtha History in Tamil ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் (1480 முதல் 1600 வரை) ஒரு சிறந்த துவைத துறவி ஆவார். ஸ்ரீ மத்வ தத்துவத்தின் அடிப்படையில் பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார். எண்ணற்ற கவிதைகளை இயற்றிய இவர் சோதே மடத்தின் மடாதிபதியாக இருந்தார். பர்யாய வழிபாட்டு முறையை நிறுவினார். ஸ்ரீ மத்வரின் படைப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து, கன்னட இலக்கியத்தை ஊக்குவித்ததற்காகவும், இதனால் ஹரிதாச இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து பங்களித்ததற்காகவும் பாராட்டப்படுகிறார். இவரது பக்திப் படைப்புகள் மிகச் சிறந்தவை, ஒரு சாதாரண மனிதன் கூட படிக்கக்கூடியவை. பிறப்பு, கல்வி மற்றும் சந்நியாசம் வாதிராஜா கர்நாடகாவின் குந்தபுரா மாவட்டத்தில் உள்ள ஹுவினகெரே என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் தனது 8 வயதில் சன்யாசத்தை ஏற்றுக்  கொண்டார், வித்யாநிதி தீர்த்தரின் பராமரிப்பிலும், பின்னர் வாகிஷ தீர்த்தரின் பராமரிப்பிலும் இருந்தார். முக்கியத்துவம் மற்றும் அற்புதங்கள் வாகிஷ தீர்த்தருக்குப் பிறகு சோதேவில் உள்ள மடத்தில் மடாதிபதியாக பொறுப்பேற்றார். 1512 ஆம் ஆண்டில், வாதிராஜா இந்தியாவில் புனித யாத...

Deepavali - Diwali Festival History in Tamil

படம்
[ad_1] Read Diwali History in English Deepavali in Tamil தீபாவளி 🎆 தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 🎆 இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17 லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. Diwali Festival History in Tamil தீபாவளி பிறந்த கதை 🎆 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். 🎆 இராமன் பதினா...

Bhakta Tukaram History in Tamil

படம்
[ad_1] Bhakta Tukaram History in Tamil சந்த் துக்காராம், பக்த துக்காராம், துக்காராம் மகாராஜ் என்று அழைக்கப்படும் துக்காராம் மகாராஜ், இந்தியாவின் மகாராஷ்டிராவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்து கவிஞரும் துறவியும் ஆவார். துக்காராம் தனது பக்தி கவிதைகளுக்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் ஆன்மீக பாடல்களை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர். அவரது கவிதைகள் இந்து கடவுள் விஷ்ணுவின் அவதாரமான விட்டலா அல்லது விட்டோபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவர் 1608 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். துக்காராம் தாழ்ந்த சாதியில் பிறந்தவர். இவரது பெற்றோர் விட்டோபாவின் (கிருஷ்ணரின் ஒரு வடிவம்) பக்தர்கள். திருமணத்திற்குப் பிறகும் தனது பெரும்பாலான நேரத்தை பக்தி வழிபாட்டில் செலவிட்டார். 1650-ல் இவ்வுலகை விட்டு வெளியேறி கருட வாகனம் மூலம் வைகுண்டம் சென்றதாக ஐதீகம். முக்கியமான இடங்கள் 1. துக்காராம் மகாராஜ் ஜன்ம் ஸ்தானம் கோவில், தேஹு.2. சந்த் துக்காராம் வைகுண்டர் திருக்கோவில், தேஹு.3. சந்த் துக்காராம் மகாராஜ் கதா மந்திர...

Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil

படம்
[ad_1] Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில் 🛕  சதுரகிரி தல வரலாறு:  சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். 🛕 வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு  சடதாரி  என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்...

Bogar Siddhar History in Tamil

படம்
[ad_1] Bogar Siddhar History in Tamil போகர் சித்தரின் வரலாறு 🛕 பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாசானத்தால் (Navapashanam) ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை  போகர்  என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. 🛕 மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும்  காயகல்ப  முறையை உபதேசம் செய்தார்கள். 🛕 இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகி விட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். 🛕 அடர்ந்த காட்ட...

Valmiki History & Story in Tamil - Valmiki Ashram

படம்
[ad_1] Valmiki History in Tamil வால்மீகி வரலாறு 🌼 வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர்  பெரிய குடும்பி . அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். ஒரு தடவை அவன் தனியே கொள்ளையடிக்க சென்றபோது அவனிடம் ஒரு முனிவர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் நாராயண, நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். 🌼 இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து யாரப்பா நீ! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான். 🌼 முனிவர், நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம் என்றார். சீக்கிரம் கேட்டு தொலையும் நீ யாருக்காக இந்த கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காக தான். என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்ப...

Arunagirinathar History in Tamil - அருணகிரிநாதர் வரலாறு

படம்
[ad_1] Arunagirinathar History in Tamil அருணகிரிநாதரைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை நல்லவனா நடிக்கிறதுலேயே என்னோட ஒட்டுமொத்த கெட்டிகாரத்தனமும் போயிடுமோனு கவலைப்பட ஆரம்பிச்சாக்கூட போதும். கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ளே ஒரு நல்ல மாற்றம் வரும். ஆன்ம தேடல் , ரொம்ப அவசியம். வாழ்க்கை முழுவதுமே ஒரு நடிப்புலேயே போயிடப்போகுது.. சீக்கிரம் உஷாராகுங்க.. நல்லவன்கிற போர்வை போர்த்திதான் எல்லாருமே நடமாடுறாங்க. சந்தர்ப்பம் அமையாதானு தப்பு செய்ய மனசு ஏங்கும். மாட்ட மாட்டோம்னு தெரிஞ்சா தப்பு செய்வோம். அதுக்கு அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு – அந்த தப்புக்கு , நமக்கு வேதனை ஆரம்பிக்கும். இதுதான் வாழ்க்கை. இதை மாயை அப்படின்னு சித்தர்கள் சொல்றாங்க. கடவுள் நிஜமாகவே இருக்கிறாரா.. இல்லையா..? இந்த குழப்பம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கு. ஒருவேளை , அவர் இருந்து , நாம அவரை கும்பிட்டு, அவர் அருள் கிடைச்சாப் போதுமே, நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்துடாதா.. இப்படி நினைச்சுத்தான், கோவில்கள்ளே இன்னைக்கு கூட்டம் வருது. கடவுளை பார்த்ததா சொல்றவங்க – கதை எல்லாம் , நம்பவும் முடியலை , நம்பாம இருக்கவும் முடியலை...

Agathiyar History in Tamil - அகத்தியர் வரலாறு

படம்
[ad_1] Agathiyar Siddhar History in Tamil அகத்தியர் வரலாறு 🛕 அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன. 🛕 முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். 🛕 அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய ச...

Machamuni Siddhar History in Tamil

படம்
[ad_1] Machamuni Siddhar History in Tamil 🛕 தமிழகத்திலுள்ள திருக்கோவில்களில் ஒரு மீன் மீது அமர்ந்துள்ள மனித உருவச் சிற்பங்களைக் காணலாம். அச்சிற்பங்கள்; பெரும்பாலும் திருக்கோவில் கருங்கல் சுவர்களிலும், திருமண்டபத் தூண்களிலும்; புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. 🛕 இச்சிற்பங்களை பற்றி ஆய்வு செய்த இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகாமையில் உள்ள அரியக்குடியைச் சேர்ந்த அபிஷேக், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவித்துள்ள செய்தியாவது, 🛕 இச்சிற்பங்கள், 18 சித்தர்களின் ஒருவரான மச்சமுனி, மச்சநாதர், மச்சேந்திர நாதர் என்றப் பெயர்களுடைய ஒரு சித்தரின் புராணத்தைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அப்புராணமானது, மச்சநாதர் பிறந்த வரலாறு 🛕 ஒரு சமயம் கோடியக்கரையில் ஆலவாய் சித்தரான சிவபெருமான் உமையம்மைக்கு காலஞானம் பற்றி போதித்தார். அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த கருவுற்ற மீனின் கருவும் அந்தக் காலஞானத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டது. மேலும் பல ஞானத்தை அறிய அக்கரு மனிதக் குழந்தையாக பூமியில் பிற...

Thirugnanasambandar History in Tamil - திருஞானசம்பந்தர்

படம்
[ad_1] Thirugnanasambandar History in Tamil திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சீர்காழி என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தைச் சார்ந்த சிவபாத இருதயர் – பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு தோணியப்பர் அருளால் மகனாக அவதரித்தார். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் (சட்டைநாதர்) கோவிலுக்கு செல்லும்போது தானும் வருவதாக அடம்பிடித்து உடன் சென்றார். சிவபாத இருதயர் குழந்தையை கோவிலுக்குள் உள்ள குளக்கரையில் அமரவைத்துவிட்டுக் குளத்தில் நீராடினார். தந்தையைக் காணாத குழந்தை அழுதது. உடனே, இறைவன் உமாதேவியோடு காளை வாகனத்தில் தோன்றினார். உமாதேவி குழந்தைக்குப் பொற்கிண்ணத்தில் தாய்ப்பால் ஊட்டினார். பின்னர் இருவரும் மறைந்தனர். நீராடிவிட்டு குளக்கரைக்கு வந்த சிவபாத இருதயர் குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு ஆத்திரம் கொண்டு அருகில் கிடந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கி, யார் கொடுத்த பாலை உண்டாய் என்று கேட்டார். ஞானசம்பந்தர், இறைவன் காட்சி அளித்து, இறைவி பால் கொடுத்ததைக் குறிப்பால் உணர்த்தும் “தோடுடைய செவியன்” என்னும் பாடலைப் பாடினார். இந்...

Thirunavukkarasar History in Tamil - திருநாவுக்கரசர் வரலாறு

படம்
[ad_1] Thirunavukkarasar History in Tamil திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூர் என்னும் திருத்தலத்தில் வேளாளர் குலத்தைச் சார்ந்த புகழனார் – மாதினி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் மருள்நீக்கியார் (திருநாவுக்கரசர் இயற்பெயர்). அவருக்கு திலகவதியார் என்ற தமக்கையும் உண்டு. திலகவதியார் திருமண வயது அடைந்ததும் அவரைத் தமக்குத் திருமணம் செய்து வைக்கும்படி மன்னனிடம் தளபதியாக இருந்த சிவ பக்தரான கலிப்பகையார் கேட்டார். பெற்றோரும் மகிழ்ந்து திருமண ஏற்பாடுகள் செய்தபோது, அரசன் கலிப்பகையாரை வேற்று நாட்டின் மீது படையெடுக்க ஆணையிட்டான். போருக்கு சென்று நீண்ட நாள் ஆனதால் திலகவதியின் பெற்றோர்கள் இறந்தனர். கலிப்பகையாரும் போரில் உயிர் துறந்தார். எனவே திலகவதியார் திருமணம் செய்து கொள்ளாமல், சிவநெறியில் நின்று தனது தம்பியை வளர்த்து வந்தார். மருள்நீக்கியார் பல நூல்களையும், கலைகளையும் கற்று, சமணர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் சமண மதத்தில் சேர்ந்தார். தமக்கையார் எவ்வளவே அறிவுரை கூறியும் கேளாமல், சமணர்களின் தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தை அ...