திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை வணங்கனும் தெரியுமா? திருவண்ணாமலை அஷ்டலிங்கம்
[ad_1]
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள், எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா? திருவண்ணாமலை அஷ்டலிங்கம் சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. இந்திர லிங்கத்தில் தொடங்கி அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், எம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. இந்த எட்டு லிங்கங்களுமே 12 ராசிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகவும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களும் மனித வாழ்வின் எட்டு கட்டங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எட்டு லிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அஷ்ட லிங்கங்கள் இருப்பதால் எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களை எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே அதிக அளவில் சித்தர்களையும், யோகிகளையும் மகான்களையும், மலை தன்பக்கம் இழுத்து வருகிறது என்று சொல்லலாம். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதலோடு இந்த அஷ்டலிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலைய...