இடுகைகள்

சததயகரஸவரர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்தியகிரீஸ்வரர் கோவில் | சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர்

படம்
[ad_1] சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில் (சத்யகிரீஸ்வரர் கோவில்) - விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில் முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி நடந்தது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக் கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான். அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன. இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு 'சத்தியகிரி' என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர். 'கடவுள், தேவர், மனிதர் எவராயிருந்தாலும் தனக்கான வரையறைகளைத் தாண்டி நடக்கும்போது, ​​அதற்கான விளைவுகள் ஒருநாள் ஏற்கவேண்டியிருக்கும்' என்ப