ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு
  Srirangam Ranganathaswamy Temple History in Tamil 
 
 
 
 
 திருத்தலம் 
   ஸ்ரீரங்கம்  ரங்கநாத பெருமாள் கோவில் 
 
 
 
 
 மூலவர் 
 ரங்கநாதர் 
 
 
 உற்சவர் 
 நம்பெருமாள் 
 
 
 அம்மன் 
 ரங்கநாயகி/ரங்க நாச்சியார் 
 
 
 தல விருட்சம் 
 புன்னை 
 
 
 தீர்த்தம் 
 சந்திர தீர்த்தம் & 8 தீர்த்தங்கள் 
 
 
 ஆகமம்/பூஜை 
 பாஞ்சராத்திரம் 
 
 
 புராண பெயர் 
   திருவரங்கம் 
 
 
 ஊர் 
   ஸ்ரீரங்கம் 
 
 
 மாவட்டம் 
 திருச்சி 
 
 
 
 
   ஸ்ரீ ரங்கம்  ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு 
 திருவரங்கம்  ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், பக்தர்களின் புகலிடமாக விளங்குகிறது. இங்கு விஷ்ணு தன் பக்தர்களுக்கு சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம்  பூலோக வைகுண்டம்  என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கம் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும்.
 
 ? விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்த ஸ்ரீரங்கம் கோவிலானது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ளது...