காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் வரலாறு
[ad_1]
Glory of Kanchipuram Ekambaranathar Temple Sthala Vriksha
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலவிருட்சத்தின் மகிமை
? காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது. ? காஞ்சி திரு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 3500 ஆண்டுகாலமாக இருந்த தலவிருட்சத்தின் திசுவிலிருந்து வேளாண் அறிஞர்கள் உருவாக்கிய புதிய மாஞ்செடியே காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது. ? அதன் இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். ? தற்போதும் அந்த மரம் இருக்கிறது. முன்பு கொஞ்சம் பின்னமாகி இருந்தது. தற்போது அதை உயிர்ப்பித்து புதுப்பித்திருக்கிறார்கள். ? அந்த தலவிருட்சத்திற்கு நிறைய சக்திகள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. ? காஞ்சி காமாட்சி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சற்று இந்த மாமர நிழலில் அமர்ந்து செல்வது வழக்கம். ? நாமும் நேரம் கிடைக்கும் பொழுது காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சென்று, தலவிருட்சத்தின் நிழலில் அமர்ந்து ஆன்மீக தியானத்தின் மூலம் மனஅமைதி பெறுவோமாக!குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
துடுப்பு இல்லாத படகைப் போன்றது!
திருத்தல வரலாறு
இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.[hfe_template id='115']
திருத்தலப் பெருமை

கோயில் வரலாறு
ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் பொ.ஊ. 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது. இக்கோயிலின் வெளிமதில் பொ.ஊ. 1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் இங்கு பாழ்பட்டு கிடந்த பழைய சிலைகள் உள்ளிட்ட புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்த்து புதுப்பிக்கப்பட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.[hfe_template id='115']
கருத்துகள்
கருத்துரையிடுக