காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி - Jnanagni destroys Kamagni
[ad_1]
Jnanagni Destroys Kamagni in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்கமுடியும் முடியும். என்னங்க இது? அக்னியை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி ஒரு அக்னி இன்னொரு அக்னியை அழிக்கும்? ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை அழிக்கமுடியும்! வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது. பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் அக்னிக்கு (நெருப்பு) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கபட்டிருந்தது. அக்னியை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ரிக் வேதத்தில், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்...