இடுகைகள்

சஷட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது

படம்
[ad_1] - Advertisement - விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த விரத முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியவதில்லை. இதற்கு அவர்களுடைய வேலை சூழ்நிலை ஒரு புறம் இருந்தாலும் உடல் நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் முருகனின் அருளை சஷ்டி விரதம் இல்லாமலும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சஷ்டி விரதத்தின் முதல் நாளில் செய்ய வேண்டியது நாளைய தினம் இரண்டு 2.11.2024 சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டாயமாக எழுந்து விட வேண்டும். அதன் பிறகு அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் முருகர் படம் சிலை அல்லது வேல் இருந்தால் அதற்கு முன்பாக ஒரு நெய் தீபம் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இத்துடன் முருகருக்கு உங்களால் முடிந்த எளிமையான பூஜை முறை செய்யுங்கள்.

கந்த சஷ்டி திருவிழா | kandha sasti surasamharam

படம்
[ad_1] கந்த சஷ்டி – kandha sasti பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் புத்திரராக அருள்பாலித்த முருகப் பெருமான் தேவர்களுக்குத் தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். கந்தப் பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார். அவரது பேரருளால் ஒன்று சேவலானது, மற்றொன்று மயிலானது. மால்மருகன் மயிலை வாகனமாகக் கொண்டார். சேவலைக் கொடியிலே கொண்டார். கந்தப்பெருமான் சூரபத்மாதியரை ஒடுக்கப்போர் புரிந்த திருவிளையாடலைத்தான் கந்தர் சஷ்டி விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி வரலாறு இந்தப்போர் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்கள் சூரபத்மனைக் சேர்ந்த வீரர்கள் பலரைத் தோற்கடித்த நாள். அடுத்த ஆறு நாட்கள்தான் பாநுகோபன், சிங்கமுகன் சூரபத்மன் போன்றவரை கந்தவேள் வென்று வாகை சூடிய திருநாள்.இந்தப் போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் நடந்தது. போரின் இறுதி நாள் சஷ்டி திதியன்று குரபத்மனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான் எனவே ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் ஆறு நாட்களும் சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் வரும் விரதமான