அட்சய திருதியை என்றால் என்ன? Akshaya Tritiya in Tamil
[ad_1]
Akshaya Tritiya in Tamil அட்சய திருதியை அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அட்சய திருதியை நாளில், இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்! சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். “வளருதல்” என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்! ஆதிசங்கர...