ஆன்மிகப் பாதையிலிருந்து நம்மை விலகத் தூண்டும் 8 காரணிகள்
[ad_1]
8 Factors that can Derail us from the Spiritual Path in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (ஆன்மிக நெறியாளர்) நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்). இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை. பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகச் சிந்தனை. கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள், தானம், தியானம், போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்க...