வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil
[ad_1]
Vel Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் வேல் விருத்தம் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலிமதியும் இரவியும் அலையவேவளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகலமகிழ்வு பெறும் அறு சிறையவான்சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழுசெந் நெல்களொடு தரளம் இடவேசெகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததிஇடர் அடைய நுகரும் வடிவேல்தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழிதரு கவுளும் உறு வள் எயிறுன்தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்தரு துணைவன் அமரர் குயிலும்குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்குயம் ஒடமர் புரியு முருகன்குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்குலையவிடு கொடிய வேலே வேல் விருத்தம் – 2 வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லிவெல்லா எனக் கருதியேசங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்சதுர்முகனும் நின்றிரப்பசயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராண...