பூண்டு சாதம் செய்முறை | Garlic rice recipe in tamil
[ad_1]
- Advertisement - உணவே மருந்து என்னும் அடிப்படையில் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை நாம் பூண்டு குழம்பாக வைத்துக் கொடுத்தாலும் சரி, வேறு எதிலாவது சேர்த்து கொடுத்தாலும் சரி அதன் வாடைக்கு பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் பூண்டு சாதம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பூண்டை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமசீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. பூண்டை அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், கீழ் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அத