Rama Navami Viratham, Pooja & Mantra in Tamil
[ad_1]
Rama Navami in Tamil ராம நவமி என்றால் என்ன? சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்துக்களின் மிக முக்கிய விரத நாளகா கடைப்பிடிக்கப்படுகின்றது. Rama Navami Viratham in Tamil ராம நவமி விரத முறை ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர். இவ்வாறு ராமர் ...