சக்தி சிவமாவது - Sakthi Sivamavathu in Indus Valley Stamp
[ad_1]
சக்தி சிவமாவது எச்-2120எ,பி என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இந்தியத் தொல்பொருள் துறையினர் அரப்பாவில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, எச்-2120எ,பி என்ற முத்திரையின் நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 3.1, பக்கம் 286-லும், இதனைப் பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 436-லும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒரு பக்கம் சேதமடைந்துள்ளதும் செவ்வக வடிவம் உடையதுமான இந்த முத்திரையின் ‘எ’ புறத்தில் 3 உயிர் எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 1 உயிர் எழுத்தும் கீறப்பட்டுள்ளன. அவற்றை இடமிருந்து வலமாக, (ஐ + ஐ) + உ + ஆ. ‘ஐஐ உ ஆ’ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ஐ’இ ‘ஐ’ என்பவை 9-ஆவது உயிர் எழுத்துக்கள், ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும். ‘ஐஐ’ என்பதை தமிழ் இலக்கண முறைப்படி ‘ஐயை’ எனப் படிக்கப்படுகிறது. ‘ஐயை’ என்பதற்கு சக்தி என்னும் பார்வதி எனவும், ‘உ’ என்பதற்கு சிவம் என்னும் சிவபெருமான...