முதுமையை தள்ளிப்போடும் உணவு பொருள் | Muthumaiyai thallipodum unavu porutgal
[ad_1]
- Advertisement - சிறுவயதில் இருப்பவர்களுக்கு குறைவான வயது ஆகிறது என்று கூறினால் கோபம் வரும். இல்லை நான் பெரியவன் ஆகிவிட்டேன். எனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறுவார்கள். இதே 35 வயதிற்கு மேல் சென்ற பிறகு உனக்கு வயதாகி விட்டது என்று கூறினால், அப்பொழுதும் கோபம் வரும். பலருக்கும் தங்களுடைய வயதை வெளிப்படையாக காட்ட விருப்பம் இருக்காது. முடிந்த அளவிற்கு வயதை குறைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக செயற்கையான முறைகளை பின்பற்றாமல் இயற்கையிலேயே நம்முடைய உடலை முதுமை அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும். அப்படி முதுமையை தள்ளிப் போட உதவக்கூடிய சில உணவுப் பொருட்களை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் கண்டிப்பான முறையில் முதுமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது எப்பொழுது வருகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். பலருக்கும் தங்களுடைய இளம் வயதிலேயே முதுமை தோற்றம் என்பது ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கோ வயதான பிறகும் அவர்கள் இளமையாக தோற்றம் அளிப்பார்கள். இதற்கு அவர்களின் மரபணுக்களே காரண