கடவுளின் திருவுருவ உடலும், உள்ளமும் மேலானதே
[ad_1]
எச் – 695எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 2 பக்கம் 315-லும் மற்றக் குறிப்புக்கள் பக்கம் 443 – லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது – சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 7 எழுத்துக்கள் தேய்ந்துள்ளன. அவற்றில் 5ஆவது, 6ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன. கீழ் பகுதியில் தேய்ந்துள்ள எருது வகையைச் சேர்ந்த ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியும், பரமஞான குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது அடையாளப்படுத்த முடிகின்றன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை மிருதுவான துணி அல்லது மரப்பட்டைகளின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ப + ர + மே + சி + (ஊ + னு) + ள், பரமே சி...