சிவப்பு அவல் புட்டு செய்முறை | sivappu aval puttu seimurai in tamil
[ad_1]
- Advertisement - காலை உணவு என்று பார்க்கும் பொழுது பலரது வீட்டிலும் இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் இருக்கும். இதை தவிர்த்து ஆரோக்கியமான காலை வேளை உணவாக எதை செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்று தான் வரும். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆரோக்கியமாக ஏதாவது ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி செலவு செய்யாமல் விரைவிலேயே அதே சமயம் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் எந்த தவறும் இல்லை அல்லவா? ஆம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாக திகழ்வது தான் சிவப்பு அவல். சிவப்பு அவலை வைத்து குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் புட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,சர்க்கரை – 3 ஸ்பூன்,முந்திரி – 5,நெய் – ஒரு ஸ்பூன்,தேங்காய் துருவல் – 3 ட...