இடுகைகள்

Avanithanile லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Avanithanile Piranthu Lyrics in Tamil

படம்
[ad_1] அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள் Avanithanile Piranthu Song Lyrics in Tamil அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 110 அவனிதனிலே பிறந்து (பழநி): தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த …… தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து     அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று     அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்     திருவடிக ளேநி னைந்து …… துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று     திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை     மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த     மலைமகள்கு மார துங்க …… வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து     படியதிர வேந டந்த …… கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து     பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே. அவனிதனிலே பிறந்து பாடல் விளக்கம் Avanithanile Piranthu Song Meaning in Tamil அவனிதனிலே பிறந்து … இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து … குழந்தை எனத் தவழ்ந்து அ...