பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
[ad_1]
- Advertisement - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் சூரிய பகவானுக்குரிய திதியான சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு எந்த தீபத்தை ஏற்றினால் நமக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியாக இருந்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும். அப்படி இல்லை என்றாலும் ஒரு அதிகாரத் தன்மையுடைய வேலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய வேலையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வரியம் நிறைந்தவர்கள...