பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் சூரிய பகவானுக்குரிய திதியான சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு எந்த தீபத்தை ஏற்றினால் நமக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியாக இருந்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும். அப்படி இல்லை என்றாலும் ஒரு அதிகாரத் தன்மையுடைய வேலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய வேலையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வரியம் நிறைந்தவர்களாகவும் அவர்கள் திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் சரியாக இல்லாத பட்சத்தில் இந்த பலன்கள் அனைத்தையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் நாளைய தினத்தில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம். - Advertisement - பொதுவாக சப்தமி திதி என்பது மிகவும் சிறப்புக்குரிய திதியாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு ஆன்மீக செயலாக இருந்தாலும் அதற்கு அளவில்லாத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற நாட்களில் ஒரு தீபம் ஏற்றி நாம் வழிபட்டால் அந்த ஒரு தீபத்திற்குரிய பலன் தான் கிடைக்கும். ஆனால் சப்தமி நாளில் ஒரு தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணில் அடங்காத தீபம் ஏற்றி வழிபட்டதற்குரிய பலன் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் சூரிய பகவானுக்கு ஏற்றக்கூடிய ஒரு தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இதற்கு ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து ஒரு திரியாக மாற்ற வேண்டும். இப்படி மொத்தம் 12 திரிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சூரிய பகவானுக்கு அந்த அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் 12 திரிகளையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நமக்குத் தெரிந்த சூரியன் ஒருவர்தான் என்றாலும் இந்த பிரபஞ்சத்தில் 12 சூரிய பகவான்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் ஒருசேர அவர்களுக்குரிய திதியான சப்தமி திதி அன்று நாம் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அவர்கள் அனைவரின் அருளால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். அளவில்லாத பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - இதோடு மட்டுமல்லாமல் சூரிய பகவானை நாம் 12 முறை வலம் வந்து 12 முறை நமஸ்காரம் செய்து 12 சிவப்பு செம்பருத்தி மலர்களை சூரிய பகவானுக்கு சாற்றி சூரிய பகவானுக்குரிய ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் மனதார உச்சரித்தோம் என்றால் நம்முடைய வாழ்வில் சூரிய பகவானால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இதையும் படிக்கலாமே: மார்கழியில் நரசிம்மர் வழிபாடு பலரது கனவாக திகழக்கூடிய இந்த வேலை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்வதற்கு நாளைய தினத்தில் சூரிய பகவானை இந்த முறையில் முழுமனதோடு வழிபாடு செய்து அளவில்லாத பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%81-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87/?feed_id=3588&_unique_id=676759907ef90

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

பூஜை அறைக்கான வாஸ்து - பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள் மற்றும் அலங்கார யோசனைகள்