நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை சூப்
[ad_1]
- Advertisement - எங்கெங்கோ சென்று தெரியாத மூலிகையை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும் என்று யோசிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, நம் கண் முன்னே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அற்புதம் வாய்ந்த சில மருத்துவ குணங்கள் கொண்டுள்ள செடிகள் பக்கம், நம் உணவு முறையை திருப்பினாலே இந்த உடம்பு நோய்களை எதிர்த்து போராட தயாராகிவிடும். அப்படி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய முருங்கை இலையை பயன்படுத்தி அற்புதமான சூப் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி நிறைய சின்ன வெங்காயம் – ஏழு தக்காளி – ஒன்று உப்பு – தேவையான அளவு இஞ்சி – ஒரு இன்ச் பூண்டு – ஆறு பற்கள் சீரகம் – ஒரு ஸ்பூன் தனியா தூள் – அரை ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம் : முருங்கைக்கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி நிறைய முருங்கைக் கீரையை...