திருச்சுழி திருமேனிநாதர் கோவில்: Tiruchuli Thirumeninathar Temple
[ad_1]
Thirumeninathar Temple Tiruchuli சிவஸ்தலம் அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழியல் இறைவன் பெயர் திருமேனிநாதர், பூமிநாதசுவாமி, சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர் அம்மன் பெயர் துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை தல விருட்சம் அரசு, புன்னை தீர்த்தம் பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) புராண பெயர் திருச்சுழியல் ஊர் திருச்சுழி மாவட்டம் விருதுநகர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Tiruchuli Temple History in Tamil திருச்சுழியல்: சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்...