குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோவில்: Gudimallam Temple
[ad_1]
Gudimallam Sri Parasurameswara Temple in Tamil சிவஸ்தலம் பெயர் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில், குடிமல்லம் மூலவர் பரசுராமேஸ்வரர் அம்மன்/தாயார் ஆனந்தவல்லி ஊர் குடிமல்லம் மண்டலம் ஏர்பேடு மாவட்டம் சித்தூர் மாநிலம் ஆந்திரா தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து 13 கிமீ தொலைவிலும், காளஹஸ்தியுலிருந்து 35 கி. மீ தொலைவிலும் உள்ள சிறிய கிராமம் குடிமல்லம். இங்கு ஸ்வர்ணமுகி ஆற்றங்கறையின் அருகில் அமைந்துள்ளது அழகிய பரசுராமேஸ்வரர் ஆலயம். இது மிகவும் பழமையான 2ம் அல்லது 3ம் நூற்றாண்டு ஆலயம் ஆகும். ரிக் வேத காலத்திற்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள லிங்கம் உலகத்திலேயே முதல் லிங்கம் என்று கூறப்படுகிறது. லிங்கம் என்பதன் பொருள் “லிங்” என்றால் உயிர்களின் தோற்றம்.“கம்” என்றால் உயிர்களின் ஒடுக்கம். லிங்கமாகிய சிவன் உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் உரியவராக இருக்கிறார். இங்கு மும்மூர்த்திகளும் ஒன்றாக உள்ளனர். இங்கு அடிபாகத்தில் பிரம்மா யக்ஷ ரூபத்திலும், அதற்கு மேல் விஷ்ணு பரசுரா...