இடுகைகள்

பபநசம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Papanasam thanjavur sivan temple |தஞ்சை பாபநாசம் 108 லிங்கம்

படம்
[ad_1] 108 லிங்கம் கோவில் (பாபநாசம் தஞ்சாவூர் சிவன் கோவில்) - கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகவோ சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். Papanasam thanjavur sivan temple history / பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு: இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெய