கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு
[ad_1]
- Advertisement - நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள் ஏற்படும் பொழுது அந்த நன்மைகளின் விளைவால் நம்முடைய புண்ணிய கணக்கு அதிகரித்து, மீண்டும் பிறவாமை நிலை என்பது உண்டாக்கும். இந்த புண்ணிய கணக்கை அதிகரிப்பதற்காக தான் நாம் தான தர்மங்களை செய்கிறோம். கர்ம வினைகள் குறைய குறைய தான் புண்ணியம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவ மந்திர வழிபாடு 2024 ஆம் ஆண்டு வரக்கூடிய கடைசி பிரதோஷம் தான் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அது சனி மகா பிரதோஷமாக திகழ்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் கிடைக்கக்கூடிய பலனை விட பல மடங்கு அதிக அளவு பலன் என்பது சனி மகா பிரதோஷ நாளில் நமக்கு கிடைக்கும் என்பதால...