Arupadai Murugan Arutpaamaalai in Tamil
[ad_1]
ஆக்கம்: முனைவர் த. சிதம்பரம்துறைத்தலைவர் (பொறுப்பு)பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரிராஜபாளையம் – 626108மொபைல் நம்பர்: 9842898370 Arupadai Murugan Arutpaamaalai in Tamil பழநியாண்டவர் பாமாலை ஞாலம் தான் உய்ய வேண்டி ஞானமும் செழிக்க வேண்டிஅம்மையப்பனை வலம் சுற்றிய ஐந்து கரத்தோன் ஆசியோடுஉலகம் தான் புண்ணியமெய்த உவகையுடன் மயிலேறிவந்ததண்டம் தாங்கும் ஞான உருவினனை தரணியைக் காக்க போற்றுகின்றோம்! ஞானமே உருக்கொண்டவன் ஞானப் பழம் வேண்டிநின்றான்ஐங்கரனவன் கவர்ந்ததனால் அழகனவன் கனல் கண் காட்டஅம்மையப்பன் ஆறுதல் சொல்ல அடிபழனிதனில் திருவடி வைத்துநின்றதண்டம் தாங்கும் ஞான உருவினனை தரணியைக் காக்க போற்றுகின்றோம்! ஈன்றோர்கள் இன்முகம் மலர அறுமுகனின் திருமுகம் மலரஅன்னை பிதா முன்னறி தெய்வமென்று தமிழ் கிழவி தமிழிசை பாடிபைந்தமிழால் பண்ணமைத்தாள் பல்வாராய் எண்ணியதோ திண்ணமென்ற குலவிதனைதண்டம் தாங்கும் ஞான உருவினனை தரணியைக் காக்க போற்றுகின்றோம்! உமையவளும் மனமிரங்கி உவகையுடன் உரைத்திட்டாள் திர...