Chithirai Matha Viratham - சித்திரை மாத விரதங்கள்
[ad_1]
Chithirai Matha Viratham 🛕 பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். 🛕 சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள் 🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கோண்டாடுகின்றனர். அன்றைய தினம் காலையில் நீராடி உடலையும், வீட்டையும் சுத்தப்படுத்தி சூரிய உதயத்தை தரிசித்து குடும்பத்துடன் தங்களது குலதெய்வத்தின் கோவிலுக்கோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று இறைவனை வழிபடவேண்டும். 🛕...