திருச்சி திருவானைக்காவல் கோவில் சிறப்புக்கள்
[ad_1]
Thiruvanaikaval Jambukeswarar Temple Special in Tamil 🛕 திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் பொன்னி என்றும் தென்கங்கை என்றும் அழைக்கப்படும் காவேரி நதியின் வடகரையிலும், அதன் கிளை நதியான கொள்ளிடம் நதியின் தென்கரையிலும் ஐந்து திருச்சுற்றுக்களைக் கொண்ட திருவானைக்கா என்னும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஐந்து மூலப்பொருள்களில்; (ஐம்பூதங்களில்) இரண்டாவதான நீர் தத்துவத்தைக் குறிக்கும் சிவத்தலமாகும். 🛕 இந்தச் சிவதலத்தில் சிவபெருமான் ஐம்புகேசுவராகவும், உமையம்மை அகிலாண்டேசுவரியாகவும் அர்ச்சை என்னும் வழிபாட்டிற்குரிய தெய்வத்திருமேனி கொண்டு எழுந்துருளியுள்ளனர். சிவபெருமான் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கருவறையின் விமானம் ஐந்து கலசங்களைக் கொண்டது என்பதும் ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் வழியாக பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசிக்கும்படியான அமைப்பும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கவை. 🛕 இத்திருக்கோவில் சைவ சமய நாயன்மார்களான திருவாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காட...