இன்ஸ்டன்ட் முட்டை கார தோசை | Instant muttai kara dosai
[ad_1]
- Advertisement - விதவிதமான தோசை வகைகளில் முட்டை தோசை என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். தோசையை ஊற்றி அதன் மீது முட்டையை போட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி செய்யாமல் தோசை மாவில் கொஞ்சம் மசாலாக்களையும், இது போல சேர்த்து வித்தியாசமான முறையில் ஒருமுறை வார்த்து பாருங்கள், அவ்வளவுதான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் இதே தோசை தான் இனி வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். அருமையான சுவையுடன் முட்டை கார தோசை எப்படி செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று முட்டை – ஒன்று மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து முட்டை கார தோசை செய்முறை விளக்கம் : இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவு எடுத்து ஒரு...