பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil
[ad_1]
- Advertisement - உணவே மருந்து என்று கூறக்கூடிய நம்முடைய பாரம்பரியத்தில் பலரும் இன்றைய காலத்தில் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தவிப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில் பிரண்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். பிரண்டையில் அதிக அளவு கால்சியம் சக்தி இருக்கிறது என்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் விரைவிலேயே கூடி வலுமை பெறும். இதோடு மட்டுமல்லாமல் சோர்வோடு இருப்பவர்களுக்கு பிரண்டையை தருவதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக திகழ்வார்கள். ஞாபக சக்தி அஅதிகரிக்கும். பசியை தூண்டும். உயரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பிரண்டையை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது