இடுகைகள்

மததரயல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்து சமவெளி முத்திரையில் அத்துவைதத் தத்துவம்

படம்
[ad_1] Advaitha Stamp in Indus Valley Civilization அகில உலக நாடுகளில் எல்லாம் மூத்த நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம். அந்நாகரித்திற்கு மிகச் சிறந்த சான்றுகளாகக் கூறப்படுபவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள். அவற்றில் எம்-1எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 1லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில்; எண் ஒன்று, சோகம் என்பதைக் குறிக்கும் குறியீடு, 5 எழுத்...