இடுகைகள்

தமழ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் புத்தாண்டு சிறப்பு | Tamil Puthandu

படம்
[ad_1] தமிழ் வருடப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில மாதம் ஏப்ரல்-13 அல்லது 14-ம் தேதியன்று வருகின்றது. ஆண்டுக்கு இருமுறை சூரியன் நேர்கிழக்கே உதித்து, உச்சி வேளையில் அதே நேர்கோட்டைக் கடந்து, மாலையில் அதே நேர்கோட்டில் மறைகிறான். அதாவது. ஆதவன் பூமத்திய ரேகையில் பயணிக்கிறான். அவ்வாறு சூரியன் பயணிக்கும் ஒரு நாள் சித்திரையிலும், மற்றொரு நாள் ஐப்பசியிலும் வருகிறது. இவ்விரண்டு நாட்களையுமே விஷு புண்ணிய காலம் என்று போற்றுகின்றனர். சித்திரையில் வரும் விஷு நாளையே புத்தாண்டுத் தொடக்கமாக கொண்டாடுகின்றோம். தமிழ் புத்தாண்டு சிறப்பு சித்திரை மாதத்தில் வசந்தகாலம் எனும் இளவேனில் காலம் தொடங்குகிறது. மாந்தளிர் செழித்து, வேப்பம்பூ பூத்துக்குலுங்கும் காலம் .மனித வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் கலந்தே இடம் பெறுகின்றன. அதாவது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை உணர்த்துவது போல அன்றையதினம் சமையலில் ஆறு சுவை உணவை சாப்பிடுகின்றனர். அதில் வேப்பம்பூ, பச்சடியே இருக்கும். அன்றைய தினம் புத்தாடை உடுத்திக்கொண்டு ஆலயங்களுக்கு சென்று இறைவழிபாட்டை முடித்துக்க

நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ்

படம்
[ad_1] நவ கைலாய தலங்கள் | நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ் – அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.நவ கைலாயம் தலங்களின் விபரம்:- சூரிய தலம்...தலம்: பாபநாசம்அம்சம்: சூரியன்நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருபத்திடம்: திருநெல்வேலியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்து, அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய

சங்கரன்கோவில் கோவில் வரலாறு தமிழ் | சங்கரன்கோவில் வரலாறு

படம்
[ad_1] இந்த பதிவில் சங்கரநாராயண சாமி கோவில் வரலாறு (சங்கரன்கோவில் கோவில்) மற்றும் கோவிலின் சிறப்புகளோடு, நடை திறக்கும் நேரம் போன்ற பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன... சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு:-மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்க ஓடினான். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று ப

கேதார்நாத் கோவில் வரலாறு தமிழ் | கேதார்நாத் கோயில் முக்கோண வடிவ லிங்கம்

படம்
[ad_1] இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் #கேதார்நாத்_கோயில் : முக்கோண வடிவ லிங்கம் உள்ள அதிசய கோயில் இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்தக் கோயிலைச் சிறு துரும்பும் அந்தச் சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்தக் கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது. பெரும் வெள்ளத்தால் அந்த பகுதியே சிதைந்தாலும் கோயில் தன் கம்பீரத்தைக் கைவிடாமல் நிலைத்திருக்கிறது. வாருங்கள் அந்த கோயிலின் சிறப்பைக் காணலாம்!இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பித்த கேதார்நாத் கோயில் இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகவும் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச கேதார ஆலயங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும் அமைந்த சிறப்பைப் பெற்றது. மேலும் இந்த கோயிலானது பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கேதர்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிகவும் பயங்கரமான வெள்ளம் மற்றும் நிலச்